தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2019, 8:12 PM IST

ETV Bharat / state

மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்கள்!

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்.கே.மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

District collectors who examined the affected areas of rainfall
மழை வெள்ளம் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்.கே.மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை, தாம்பரம் தர்காஸ் சாலை, முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், முடிச்சூர் வரதராஜபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் வடகிழக்குப் பருவ மழையால், பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களை பேரிடர் முன்னெச்சரிக்கைக் குழு முதன்மை கண்காணிப்பாளர் சந்தோஷ்.கே. மிஸ்ரா பார்வையிட்டார்.

அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான் லூயிஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா மற்றும் பொதுப்பணி,நெடுஞ்சாலை,உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மழை வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்.கே.மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், கண்ணன் அவின்யூ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியதால், அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்; அதனால் அப்பகுதியில் கவனம் செலுத்தி அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details