தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாயலூர் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - செங்கல்படடு ஆட்சியருக்கு பொதுமக்கள் நன்றி

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதிய தடுப்பணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
புதிய தடுப்பணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

By

Published : Dec 4, 2019, 2:45 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்றின் குறுக்கே சுமார் 32 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பெய்த தொடர் கனமழையால் உபரி நீரானது பாலாற்றில் கரைபுரண்டு ஓடுகின்றது.

இதில் தடுப்பணையின் மேல் சுமார் 30 சென்டிமீட்டர் அளவு உபரி நீரானது நிரம்பி வழிகிறது. இதனை பலரும் சுற்றுலாத்தலம் போல் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

புதிய தடுப்பணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று தடுப்பணையை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் தடுப்பணையின் மூலம் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் இரண்டு மீட்டர் உபரி நீரானது சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐந்து கிராமங்களுக்கு குடிநீர், விவசாயத்திற்கு பெரிதும் உபயோகமாக உள்ளது எனவும் இந்த திட்டத்தை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி என்றும் கூறினர்.

இதையும் படிங்க: 179 ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பியுள்ளது-மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details