இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,
அத்திவரதர் வைபவம் நிறைவையொட்டி இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை! - உள்ளூர் விடுமுறை
காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவம் நிறைவையொட்டி ஆகஸ்ட் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
அத்திவரதரை நேற்று மட்டும் மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் அத்திவரதர் வைபவம் நிறைவுக்கு வரவிருப்பதால், ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுமுறையை தொடர்ந்து, 16 மற்றும் 17ஆம் தேதிகளிலும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16, 17 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே ஏழாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் கூடுதலாக 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கூடுதலாக பேருந்து வசதிகள் இயக்கப்படும். 46 இடங்களில் அன்னதானம் வழங்கப்படும். அதிகபட்சமாக 21 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.