காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஐந்து மாதத்திற்கு பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பு விதிமுறைகளோடு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆட்சியர் ஆய்வு - அத்தி வரதர்
காஞ்சிபுரம்: பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்.
district collector inspection in Kanchipuram varadaraja Perumal temple
ஐந்து மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்டதால் கோயிலில் அத்தி வரதர் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தையும், சக்கரத்தாழ்வார் தரிசித்துவிட்டு பெருந்தேவி தாயார் சன்னதி, அத்திகிரி மலையிலுள்ள வரதராஜப்பெருமாள் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இன்று (செப்-5) சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால், கோயில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்.