தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் திமுக சார்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கல்! - Kancheepuram district news

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்களின் தொகுப்பு 700 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு நல சங்கங்களின் உறுப்பினர்களான 700 நபர்களுக்கு திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான சி.வி.எம்.பி எழிலரசன் ஏற்பாட்டில் 12 லட்சம் மதிப்பிலான அரிசி,மளிகை பொருட்களின் தொகுப்பை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ இன்று வழங்கினார்

By

Published : Jun 5, 2021, 9:53 PM IST

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாநில மாணவரணிச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் பல்வேறு நலச் சங்கங்களின் உறுப்பினர்களான 700 நபர்களுக்கு சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை சட்டப்பேரவை உறுப்பினருமான க. சுந்தர் கலந்துகொண்டு அரிசி, மளிகைப் பொருள்களின் தொகுப்பை வழங்கினார். இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ. சேகரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி. சீனிவாசன், மாவட்டப் பிரதிநிதி எம்.எஸ். சுகுமார், திமுக நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details