நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் என்பவர், தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, ராஜிவ் நினைவு தூண் அருகே சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய கருத்துகளை டிக்-டாக் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.