காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் 48 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். கடந்த 1ஆம் தேதி தொடங்கிய வைபவம் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.
முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அத்திவரதர் தரிசனம்! - முன்னாள் பிரதமர் தேவகவுடா
காஞ்சிபுரம்: அத்திவரதர் 45ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று 45ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது மகன் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசித்தனர்.
இருபது நிமிடம் சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த தேவகவுடா உலக நன்மை அடைய வேண்டி கொண்டதாகத் தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர் சந்திப்பில், "நாடு அமைதியான சூழலில் வளமாக இருக்க வேண்டிக்கொண்டதாகவும், இந்த வைபவம் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் வேண்டுதலை அத்திவரதர் நிறைவேற்ற வேண்டும். அதிக மழைப் பொழிவின் காரணமாக இரு மாநிலங்கள் நீர் ஆதார பிரச்னைகள் சுமுகமாக தீரும்” என நம்பிக்கை தெரிவித்தார்.