தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதரை தரிசித்த துணை முதலமைச்சர் - fig tree

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அத்திரவரதை தரிசனம் செய்தார்.

ops

By

Published : Jul 31, 2019, 7:10 PM IST

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் அத்திவரதர் நிகழ்ச்சி பிரசிதிப்பெற்றதாகும். 48நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அத்திவரதரை தரிசித்துவருகின்றனர். தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அந்தவகையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்திற்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது அவரது பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

அத்தி வரதரை தரிசிக்க வரும் ஒபிஎஸ்

அவருடன் கட்சி பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உடன் வந்தனர். துணை முதலமைச்சர் அத்திவரதரை தரிசிக்க வந்ததால், அரைமணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களை காக்கவைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details