உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. உத்திரமேரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் சேதமடைந்த நான்கு மின்கம்பங்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. சில மின்கம்பங்களில் கான்கீரிட் கலவைகள் உடைந்து கம்பிகள் வெளியே நீண்டு எலும்புக்கூடுகள் போல் காட்சியளிக்கின்றன.
சரிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்... அச்சத்தில் மக்கள் - damaged electric polls
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது.
![சரிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்... அச்சத்தில் மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4528105-thumbnail-3x2-polls.jpg)
அதேபோன்று வேடபாளையம் என்னும் இடத்தில் உள்ள மின்கம்பம் ஒன்றும் உடைந்து அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காற்று வீசும்போது தலையாட்டி பொம்மையைப்போல் கம்பம் ஆடுவதாகவும் பலத்த காற்று வீசினால், கம்பம் சாய்ந்து விழுந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னையில் கடந்த சில தினங்களுக்குமுன்பு மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலியானார். அதுபோல இப்பகுதியில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.