தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு மீறல்: 25 கடைகளுக்குச்  சீல்வைப்பு - காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம்: ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறிய 25 கடைகளுக்கு பெருநகராட்சி அலுவர்கள் சீல்வைத்தனர்.

Curfew violation
Curfew violation

By

Published : Jun 25, 2020, 8:50 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டுக்குள்பட்ட குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் தளர்த்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட சின்ன காஞ்சிபுரம், மேட்டு தெரு, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 25 கடைகளுக்குச் சீல்வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details