காஞ்சிபுரத்தில் 50,009 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத் துறை - Covid 2nd Wave pandemic
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் 50 ஆயிரத்து 9 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் 50 ஆயிரத்து 9 நபர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குனர் துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட நான்கு அரசு மருத்துவமனைகளிலும், 28 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 45 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் இன்று (ஏப்ரல் 16) மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
குறிப்பாக தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் ஆயிரத்து 650 தொழிற்சாலை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 15) வரையில் 32 ஆயிரத்து 677 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரையில் ஆயிரத்து 492 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் இதுவரையில் மாவட்டத்தில் 473 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.