தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் கொடுக்கவில்லையென்றால் மகளைக் கடத்திவிடுவேன் - கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் மிரட்டல் - கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூட்டுறவு வங்கி பெண் ஊழியரிடம் கடன் வாங்கி கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், பணம் கொடுக்கவில்லையென்றால் மகளைக் கடத்திவிடுவேன் என மிரட்டிவரும் கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் துறையிடம் புகார் மனு அளித்தார்.

கூட்டுறவு வங்கி பெண் ஊழியர்
கூட்டுறவு வங்கி பெண் ஊழியர்

By

Published : Jan 3, 2022, 9:58 PM IST

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ராஜவீதி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் அதே பகுதியில் சிற்பம் செய்யும் தொழில் செய்துவந்துள்ளார். தனது தொழில் வளர்ச்சிக்காக 2019ஆம் ஆண்டு திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி பெண் ஊழியரான பார்கவி என்பவரிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

பத்மாவதி சரியாக வட்டி கொடுத்துவருவதைப் பார்த்த பார்கவி தான் வசூலிக்கும் 2 பைசா வட்டியை 6 பைசா வட்டியாகத் திடீரென உயர்த்தி அதனைக் கொடுக்க பத்மாவதியை வற்புறுத்தியுள்ளார். அசல் பணத்தை முழுவதுமாகக் கொடுக்க முடியாத சூழலால் வேறு வழியில்லாமல் பத்மாவதி தான் வாங்கிய கடனுக்கு 6 பைசா வட்டியினை கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தொழிலும் முடக்கம் ஏற்பட பத்மாவதி வட்டி கொடுக்க முடியாமல் பரிதவிக்க, பார்கவி தன்னிடம் சீட்டு போட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி, அதில் வரும் தொகையை வைத்து தனது வட்டியை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வேறு வழியின்றி பத்மாவதி சீட்டு போடத் தொடங்கி அதில் வரும் தொகையை பார்கவியிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி எனப் பல்வேறு வகையில் வட்டிப் பணத்தை பத்மாவதியிடம் பார்கவி வாங்க தொடங்கியுள்ளார்.

கூட்டுறவு வங்கி பெண் ஊழியர்

இந்த சூழல் குறித்து வெளியில் சொன்னால் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அவமானம் ஏற்படுவது மட்டுமின்றி, வட்டிக்கு பணம் கொடுத்த பார்கவி தங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வெளியில் சொல்லாமல் பத்மாவதி இருந்து வந்துள்ளார். மேலும் தொழிலுக்குப் பயன்படுத்திவந்த லாரியையும் வட்டிக்காக அடைமானம் வைத்துள்ளார். 10 பவுன் தங்க நகையையும் விற்று வட்டி கட்டியுள்ளார்.

இந்நிலையில் கடன் வாங்கிய முழு பணத்தை உடனடியாகக் கட்ட வலியுறுத்தி தொடர்ச்சியாக பார்கவி, பத்மாவதியை மிரட்டி வந்துள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் பத்மாவதியின் 11 வயதான மகளை கடத்திச் சென்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து இன்று (ஜனவரி 3) கூட்டுறவு வங்கி பெண் ஊழியரான பார்கவி மீது கந்து வட்டி கொடுமை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஆகியோரிடம் பத்மாவதி புகார் மனு அளித்தார்.

மூன்று மாதத்திற்கு முன்பு பார்கவியிடம் கடன் வாங்கி கந்துவட்டி கொடுக்க இயலாத ஒரு குடும்பத்தை பார்கவி, தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுக்கும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details