காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை அருகேயுள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 270 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 25) மேலும் புதிதாக மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் மொத்தம் 38 மருத்துவக்கல்லூரி மாணவர்கள், 15 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 40 பேர் மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனையிலும், 13 பேர் வெளி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி தெரிவித்துள்ளார்.