தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்தரமேரூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா; காவல் நிலையம் மூடல்! - காஞ்சிபுரம் அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் : உத்தரமேரூர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா
காஞ்சிபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா

By

Published : Apr 14, 2021, 9:39 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், சட்டப்பேரவைத் தேர்தல் பணி முடிந்த பின்னர் விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா

இதன் காரணமாக அவர் பணிபுரிந்த காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. காவல் நிலையத்திற்குள்ளே வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வளாகத்திற்கு வெளியே புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : ’10 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details