தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தீவிரம்: காஞ்சிபுரத்தில் வீடு வீடாக பரிசோதனை! - kanchipuram district news

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கரோனா சிறப்பு கண்காணிப்பாளர் சுப்பிரமணியம்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தீவிரம்: காஞ்சிபுரத்தில் வீடு வீடாக பரிசோதனை
கரோனா தீவிரம்: காஞ்சிபுரத்தில் வீடு வீடாக பரிசோதனை

By

Published : Jun 24, 2020, 1:15 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இதன் தாக்கம் தீவிரம் அடைந்தள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வரும் 30 தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்கில், பொதுமக்களின் வெப்பநிலையை பதிவு செய்தும், அவர்களில் உடல்நிலை குறித்த அனைத்து விவரங்களை பதிவுசெய்ய செவிலியர்கள், சத்துணவு ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கடந்த இரண்டு நாளாக வீடு வீடாக பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கரோனா கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியில் ஈடுபட்ட சுகாதார செவிலியர்களிடம், கணக்கெடுப்பின்போது வீட்டில் வசிக்கும் முதியோர்களின் வெப்பநிலை அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகள் ஆகியவற்றை கவனமாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிர்ப்பாற்றல் வழங்கக்கூடிய ஊட்டச் சத்து மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அறிவுறுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: குமரி சாக்கு குடோனில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details