நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், கோயில் நகரமான காஞ்சிபுரம் நகரில் பிரசித்திபெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ளவரும் பக்தர்களுக்காக சுகாதாரத் துறையினர் அப்பகுதியிலே முகாமிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை, சளி மாதிரிகள் உள்ளிட்ட கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஏப்.14) ஒரே நாளில் 203 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்து 348 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் தீவிரம் இதையடுத்து கட்டுப்பாட்டு பகுதிகளாக 45 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பெரு நகராட்சியை பொறுத்தவரையில் கடந்த ஒரு வாரத்தில் 325 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: பரமக்குடியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்