காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காட்ராம்பாக்கத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜந்து முர்ரா (24) என்பவர் தனது சகோதரனுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கடுமையான வயிற்று வலி காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
அதையடுத்து நேற்றிரவு மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, அவரை அருகிலிருந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.