தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த குருக்கள் கைது! - சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில்

காஞ்சிபுரம்: ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் குருக்கள் ராஜப்பாவை, காவல் துறையினர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த குருக்கள் கைது..!

By

Published : Jun 23, 2019, 6:41 PM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெரும் அளவு தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாகச் சிலை திருட்டு தடுப்புக் காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து பலரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆலயத்தில் பணிபுரிந்த முன்னாள் குருக்கள் ராஜப்பா தேடப்பட்டுவந்தார்.

இவர் வெளிநாட்டில் இருப்பதாகக் காவல் துறையினருக்குத் தெரிய வரவும், இந்தியாவுக்குள் வந்தால் இவரைக் கைது செய்யும்படி குடியுரிமை அலுவலர்களுக்கு, காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த குருக்கள் ராஜப்பாவை கைது செய்யும் காட்சி

இதனைத் தொடர்ந்து கனடாவிலிருந்து மும்பைக்குத் திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்புக் காவல் துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் இல்லத்தில் முன்னிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ராஜப்பா குருக்களை எதிர்வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details