மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ரூபி மனோகர் தலைமையில் ஏர்கலைப்பை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்யத்தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்:
அதனை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த வாரே மாட்டு வண்டி, டிராக்டர்களில் ஏர் கலப்பைகளை கையில் ஏந்தியவாறு, காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகள் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாரு பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகர் மேலும், அடுத்தக்கட்ட போராட்டமாக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி உத்தரவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுவோம் என காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ரூபி மனோகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!