தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழில் பேசி வாக்கு சேகரித்த காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் - Congress general secretary collects votes

காஞ்சிபுரம்: மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகையை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Congress general secretary collects votes for Sriperumbudur candidate selvapperunthakai
Congress general secretary collects votes for Sriperumbudur candidate selvapperunthakai

By

Published : Mar 29, 2021, 11:09 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தனித்தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி, அக்கட்சியின் செயலர் சஞ்சய் தத் செல்வப்பெருந்தகையை ஆதரித்து வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

இப்பரப்புரையின்போது, கூடியிருந்த மக்களிடையே செல்வபெருந்தகைக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தமிழில் பேசி அவர் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, "10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது உங்களிடம் பணத்தைக் காட்டி வாக்களிக்க வற்புறுத்துவார்கள். ஏமாந்து விடாதீர்கள். இந்தத் தலைமுறையை காப்பாற்றுங்கள். நல்லாட்சி அமைந்திட உங்களது வாக்குகளை கடைசி நேரத்தில் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்" என்றார்.

வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்

மேலும், குன்றத்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் இரவு பகலாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details