தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2019, 1:13 PM IST

ETV Bharat / state

CAA சட்டத்தை எதிர்த்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவரணி!

செங்கல்பட்டு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவரணி சார்பாக ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

caa against protest
caa against protest

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்திற்காகப் பேரணியாக வந்த போராட்ட வீரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

காவல் துறை தடுத்தும் போராட்ட வீரர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி, முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் காவல் துறைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அணி வீரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவரணிப் போராட்டம்

இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்டோர் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பயணியிடம் ரூ. 20 ஆயிரம் கொள்ளையடித்த 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details