தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறிய கோயில்களைத் திறக்க இந்து சமய அறநிலையத்துறை கடிதம்! - காஞ்சிபுரம் கோயில் நிர்வாகத்தினர் கோரிக்கை

காஞ்சிபுரம்: சுற்று வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கோயில்களை திறக்க அனுமதி வழங்கக் கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை கடிதம்
இந்து சமய அறநிலையத்துறை கடிதம்

By

Published : Aug 1, 2020, 7:05 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு வழங்கியுள்ளது. அதன்படி, ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்களை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும் குறைவான வருமானம் உள்ள கோயில்களில் அரசு விதிப்படி பக்தர்களை அனுமதிக்காமல் நித்தியப்படி, ஆகம விதிகள் படி பூஜைகள் மட்டும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் சிறிய அளவிலான ஏராளமான கோயில்கள் உள்ளதால் அனைத்தையும் திறக்க அனுமதியளிக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த வகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆடி வெள்ளிக்கிழமை: 19 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களில் அம்மனுக்கு அலங்காரம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details