காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியிலுள்ள நேரு நகரில் நேற்றிரவு (ஜன.05) மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் மாவட்ட ஆட்சியர், தங்களது குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து ஓரிக்கை செல்லம்மாள் நகர் பகுதிக்குச் சென்ற அவர் இரவு நேரங்களில் அப்பகுதியிலுள்ள தெரு விளக்குகள் சரி வர இயங்குகின்றதா என்பதனையும் ஆய்வு செய்தார்.