தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியர் - District Collector inspects newly constructed security warehousec

காஞ்சிபுரம்: செவிலிமேடு கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திட புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று (பிப். 2) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்காக  புதியதாக கட்டப்பட்டுள்ள  பாதுகாப்பு கிடங்கில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்காக புதியதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Feb 2, 2021, 5:40 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் வாக்குசாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திட புதியதாக பாதுகாப்பு கிடங்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது தயார்நிலையில் உள்ளது.

கடந்த 2019- 2020ஆம் ஆண்டில் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20, 971 சதுரடி பரப்பளவில் இந்த பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டது. இதில் வாக்கு சேகரிக்கும் இயந்திரம், வாக்களிப்பதை உறுதி செய்திடும் இயந்திரங்கள், வாக்கு கட்டுபாட்டு இயந்திரம் ஆகியவற்றை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைப்பதற்காக லாக்கர் வசதியுடன் தனித்தனியே தரை, இரண்டு தளங்களுடன் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்தார்

இந்த வளாகம் முழுவதையும் கண்காணிப்பதற்க்கு சி.சி.டி.வி கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு தொட்டியும் இவ்வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்ந சூழலில் பாதுகாப்பு கிடங்கினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காஞ்சிபுரம் வட்டாச்சியர் பவானி, பொதுப்பணித்துறை அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கீழம்பி ஏரியிலிருந்து மணல் எடுப்பதைத் தடுத்திட கோரிக்கை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ABOUT THE AUTHOR

...view details