காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் டைம்லர் (Daimler) தொழிற்சாலை உள்ளது. இங்கு டிராக்டர், பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் 12 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் 4 ஆயிரத்து 500 நிரந்தர ஊழியர்கள், ஆயிரத்து 500 தற்காலிக ஊழியர்கள் உள்ளனர்.
இன்று (மே.26) இந்த தொழிற்சாலையில் 18 வயது முதல் 44 வயது உடைய தொழிலாளர்கள் 200 பேருக்குக் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடும் பணியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் வாகனங்களையும் பார்வையிட்டார்.