தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் தொழிலதிபராக முன்னேற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி! - மாணவர்கள் நலன் குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி

செங்கல்பட்டு: தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் தொழிலதிபராக முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Feb 21, 2020, 8:51 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள எஸ்.என். தனியார் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினர்.

பின்னர், பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கல்விக்காக அதிகப்படியான நிதிகளை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து, கல்வியில் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு உருவாகிக்கொண்டிருக்கிறது

இதில் முக்கிய பங்கு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே சேரும். இதுபோன்று, பட்டம் படித்து புது வாழ்கையில் அடி எடுத்து வைக்கும் மாணவ, மாணவிகள் வேறு ஒருவரிடம் வேலை செய்வதை தவிர்த்து, தானாக முன்வந்து தொழில்களை கையிலெடுத்து தொழிலதிபராக முன்னேற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.குமாரவேல் தலைமையில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். இவ்விழாவில் மாவட்டம், ஒன்றிய பொறுப்பாளர்கள், கல்லூரி நிர்வாக ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இதையும் படிங்க : 'இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன' - முதலமைச்சர் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details