தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - சித்திரை திருவிழா கொடியேற்றம்

காஞ்சிபுரம்: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

By

Published : Apr 26, 2021, 3:43 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் அவதரித்த ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இன்று (ஏப்ரல் 26) மேளதாளங்கள் முழங்க சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது .

ஏற்கனவே கடந்த 10 நாட்களாக ராமானுஜருக்கு உற்சவம் முடிவுற்ற நிலையில், பத்து நாட்கள் ஆதிகேசவ பெருமாள் உற்சவம் நடைபெறவுள்ளது.

கரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால், ஆலயங்களில் பக்தர்களை அனுமதிக்காமல், கோயில் நிர்வாகமே கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இதன் காரணமாக, விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details