தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா ரத்து - Sri Adikesava Perumal and Sri Bashyakara Swamy temples!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயிலின் சித்திரைத் தேர்த் திருவிழா இரண்டாவது ஆண்டாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்திருவிழா ரத்து!
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்திருவிழா ரத்து!

By

Published : Apr 16, 2021, 9:01 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்செய்வது வழக்கம்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக நேற்று (ஏப். 15) விமரிசையாக நடைபெறும் ஸ்ரீ ராமானுஜர் தேர்த் திருவிழா தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி ரத்துசெய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பத்து நாள்களுக்கு நடைபெறவிருந்த தங்கப் பல்லாக்கு, சிம்ம வாகனம் மங்கலகிரி, சூரிய பிரபை, சந்திரப் பிரபை, புஷ்ப பல்லாக்கு, திருமந்திரார்த்தம் சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட விழாக்கள் திருக்கோயில் வளாகத்திலேயே கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றுவருவதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேர்த் திருவிழா ரத்துசெய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் சில முக்கிய நிகழ்வுகள் மட்டும் யூ-ட்யூப் சேனலில் வெளியிடுமாறு பக்தர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details