காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சார்லஸின் தந்தை ஜான் பிரிட்டோ பக்கத்து ஊரான பெருநகர் கிராமத்தில் சித்த மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்.
குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் சார்லஸ் தனது குடும்பத்தினருடன் தந்தை கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சார்லஸின் மகன் ஜாக்சன் (4) தவுறுதலாக அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த சிறுவன் குடும்பத்தினர், ஊர் மக்கள் உதவியோடு சிறுவனை தேடியுள்ளனர். ஆனால், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு! சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கல்குவாரிக்குச் சென்ற மாணவன் மாயம்: மூன்று நாள்களுக்கு பிறகு சடலமாக மீட்பு