காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற கருவிகளின் பயன்பாட்டை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
மருத்துவக் கருவிகள் செயல்பாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் - அதிமுக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி - காஞ்சிபுரத்தில் மருத்துவக் கருவிகள் செயல்பாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர்
காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற கருவிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் அதிமுக வாலாஜாபாத் கணேசன், வீ. சோமசுந்தரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி உடனிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
![மருத்துவக் கருவிகள் செயல்பாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் - அதிமுக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி Chief Minister who initiated the implementation of medical instruments kanchipuram hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7928297-thumbnail-3x2-kan.jpg)
பின்னர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீ. சோமசுந்தரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி உடனிருந்தவர்களுக்கு இனிப்பு கொடுத்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர் ஜீவா கூறும்போது, "இந்த ஸ்கேன் கருவிகள் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் (2500 ரூபாய்) ஸ்கேன் செய்யலாம். அதனையும் காப்பீடு மூலம் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இதன் மூலம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் பயனடைவர்" என்று அவர் தெரிவித்தார்.