தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.120.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு - காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்
வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

By

Published : Jul 6, 2022, 3:34 PM IST

காஞ்சிபுரம் : கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று முதலமைச்சர் ஸ்டாலி ஆய்வு செய்தார். வரும் பருவமழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிகளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழ்நாடெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. கடந்த பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கொளுத்துவான்சேரி சாலையில் 16 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தந்திக்கால் கால்வாய் முதல் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் வரை புதிய மூடுதளத்துடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் மற்றும் ஒழுங்கியம் அமைக்கும் பணியில் உள்வட்ட சாலையில் அமைந்துள்ள போரூர் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, சாலையில் நடைபெற்று வரும் மூடுதள கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தடுப்பு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்றுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

ABOUT THE AUTHOR

...view details