காஞ்சிபுரம்:இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் ஜூலை 28-ந் தேதி முதல் தொடங்கி இம்மாதம் ஆகஸ்டு 10ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
பட்டு நகரம் என்று அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் பிரதான தொழிலான பட்டுச்சேலை உற்பத்தி தொழில் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தனியார் பட்டுச்சேலை நிறுவனம் முடிவெடுத்து ஒரு புது முயற்சியை மேற்கொண்டது.
அதன்படி சுமார் 35 நாட்களாக நெசவாளர் மூலம் செஸ் போர்ட்டில் இருப்பது போலவே கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டங்கள் கொண்டும், இரு புறமும் பார்டர் அமைத்து பிரத்யேக படடுச்சேலையை தயாரித்துள்ளது. இந்த பட்டுச் சேலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிமுகப்படுத்தினார்.