காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள இணைப்புச் சாலையில் தம்பதியரான முருகன் (40) - மலர் (30) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா (39) என்பவர் இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு அசோக் லேலண்ட் லாரியில் வந்துகொண்டிருந்தார்.
மரணம்
இந்நிலையில் திடீரென லாரியை ஓட்டுநர் திருப்பும்போது லாரியின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த கணவன், மனைவி இருவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகன் முகம் சிதைந்து உயிரிழந்தார்.