செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 1.5 கோடி மதிப்பில் 1000 லிட்டர் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சர் தாமோ.அன்பரசன் திறந்து வைத்தார் .
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ள தரமற்ற கட்டடங்களில் ஐஐடி மூலம் ஆய்வு செய்து தர கட்டுபாட்டுக்கு அனுப்பி, அதன் மூலம் தவறு செய்த அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.