40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்தி வரதரை ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாட்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. இதில், உலகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி அன்று மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அந்த குளத்துக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் பின் குளத்தின் தன்மையை பாதுகாக்கவும், அசுத்தம் செய்யப்படாமல் இருக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.