காஞ்சிபுரம்: நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில், நிவர் புரெவி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சேதங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக டெல்லியிலிருந்து மத்திய உள் துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழ்நாடு வந்தனர்.
அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஓர் பகுதியாக இன்று நிவர், புரெவி புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்ய மணிவாசகம் ஐ.ஏ.எஸ் ஒருங்கிணைப்பில், மத்திய மின்சார அதிகாரத்தின் துணை இயக்குநர் ஓ.பி.சுமன், மத்திய நிதித் துறை இணை இயக்குநர் அமித் குமார், மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குநர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலர் ரணன் ஜெய்சிங் ஆகிய மத்திய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர்.