ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க மத்திய அரசு, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
மத்திய அரசு அனுப்பியுள்ள குழுவில் உள்ள மருத்துவர்கள் வனிதா, பிரபா, சந்தோஷ், தினேஷ் பாபு ஆகிய நான்கு பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர் நேற்று(டிச.29) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை பார்வையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்து, கரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவு, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக் கூடம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.