தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Adi Shankaracharya Jayanti: காஞ்சியில் ஆதிசங்கரர் தங்கத்தேரில் திருவுலா!

காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவத்தை தங்கத்தேரில் வைத்து கோலாகல பவனியாக காஞ்சிபுரம் நகரில் திருவுலா கொண்டு வந்தனர்.

ஆதிசங்கரர் ஜெயந்தி
ஆதிசங்கரர் ஜெயந்தி

By

Published : Apr 26, 2023, 1:59 PM IST

காஞ்சியில் ஆதி சங்கரரை தங்கத்தேரில் வைத்து கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

காஞ்சிபுரம்: இந்தியாவில் அவதரித்த மகான்களில் மிக முக்கியமானவர் ஆதி சங்கரர். இவர் ஏழாம் நூற்றாண்டில் இன்றைய கேரள மாநிலத்தின் காலடி என்ற ஊரில் பிறந்தார். இந்து மதம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்த காலத்தில் அவற்றை ஒன்றாக்கி, வழிபாட்டு நெறிமுறைகளை உருவாக்கியவர் ஆதி சங்கரர்.

அத்வைதத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியவர். இளமைப் பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இந்து சமயத்தின் 3 அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை ஆகியவற்றை அளித்து, அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துக்காட்டியவர்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிறுவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

இந்தியா முழுவதும் பயணித்து, சிருங்கேரி, புரி, துவாரகை, ஜோஷி ஆகிய மடங்களை நிறுவினார் ஆதி சங்கரர். அவரது அவதார நாளான நேற்று (ஏப்ரல் 25) ஆண்டு தோறும் ஆதி சங்கரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து தங்கத்தேரில் ஆதி சங்கரர் சிலை வைக்கப்பட்டு வீதியுலா வந்தது.

பல வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மின்விளக்குகள் ஒளிர, வாத்தியங்கள் ஒலிக்க, வேத விற்பனர்கள் மந்திரங்கள் கூற, ஊர்வலமானது காஞ்சிபுரம் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தது. இந்த நிகழ்வை வழியெங்கும் திரளான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: Farhana: ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details