தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கிய கால்வாய் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! - ஆக்கிறப்பால் சுருங்கிய கால்வாய்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களால் 15 அடி அகல கால்வாய் மூன்று அடியாக சுறுங்கியது குறித்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Canal shrunk by occupiers: Officers demand action!
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்

By

Published : Sep 17, 2020, 12:52 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுாரில் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

ஏரியிலிருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட டி.கே.நாயுடு நாகர், மகாத்மா காந்தி நகர், பாரதி நகர் வழியாக விவசாய நிலத்திற்குச் செல்கிறது.

குடியிருப்புகளின் மத்தியல் கடந்து செல்லும் இந்த கால்வாய் கடுமையான ஆக்கிரமில் உள்ளது. பேரூராட்சி, பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளாமால் உள்ளனர். இதனால் ஒருவரை பார்த்து மற்றொருவர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்களால் 15 அடி அகலமாக இருந்த கால்வாய் மூன்று அடியாக சுறுங்கிவிட்டது. இதனால் மழைக்காலத்தில் மழை நீர் செல்ல வழியின்றி பாரதி நகரில் வெள்ள நீர் சூழ்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், " இந்தாண்டு வடக்கிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும் என வானிலை அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே, மழைக்கு முன்பு கால்வாய் ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்ற அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details