தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது இடத்தில் வெட்டப்பட்ட ஒட்டகங்கள்; தண்டித்த நீதிமன்றம்! - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: கல்பாக்கத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு 5 ஒட்டகங்கள் பொது இடத்தில் வெட்டியதை கண்டித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

MADRAS HIGH COURT

By

Published : Jul 6, 2019, 5:57 PM IST

பக்ரித் பண்டிகையையொட்டி கடந்த 2016 ம் ஆண்டு கல்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 5 ஓட்டகங்கள் வெட்டப்பட்டன. இது தொடர்பாக, பொது இடத்தில் கால்நடைகளை பலியிடக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் கீழ் 5 ஒட்டகங்கள் பலியிட்டது குறித்து கல்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் காதர் மைதின் உட்பட 6 பேர் மீது மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இது குறித்த விசாரானை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றது.

திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி காதர் மொய்தீன் உட்பட 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு ரூ. 45 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அந்தத் தொகையை விலங்குகள் நல வாரியத்திற்கு செலுத்துமாறும் குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details