சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், உலக பிரசித்தி பெற்றதுமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாதம் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி மாசி மாதம் நடைபெறுவதையொட்டி காமாட்சியம்மன் அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காமாட்சியம்மன் காலை, மாலை என இருவேளைகளில் சிம்ம வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், ரிஷப வாகனம், தங்க மான் வாகனம் என பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் ராஜவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.