காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்துள்ளது மானாமதி கிராமம். இந்தப் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயில் தெரு குளத்தில் கிடந்த மர்மப்பொருளை அப்பகுதியைச் சேர்ந்த திலீப், திருமால், யுவராஜ், ஜெயராம், சூர்யா ஆகிய ஐந்து பேரும் எடுத்துப் பார்த்தபோது, திடீரென வெடித்து சிதறியதில் ஐந்துபேரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து பேரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திருப்போரூர் அருகே மர்மப்பொருள் வெடித்து சிதறியதில் இருவர் பலி! - போரூர் அடுத்த மானாமதி கிராமம்
காஞ்சிபுரம்: திருப்போரூர் அடுத்த மானாமதி பகுதியில் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மர்மபொருள்
பின்னர் தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மர்மப்பொருள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Aug 26, 2019, 7:38 PM IST