காஞ்சிபுரம்: சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து பிறகு, முதன்முறையாக பாஜக தலைவர் எல்.முருகன் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்றார்.
அங்குள்ள கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கு உணவளித்தார். பின்னர் மடத்தில் உள்ள மகா பெரியவரின் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து பேசியதுடன், அவரிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த அவரை பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, மாநில அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் டி.கணேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கூரம் விஸ்வநாதன், நகர் பொதுச் செயலாளர் வி.ஜீவானந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.