ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து தவித்துவந்த ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குன்றத்தூர் தாலுகா நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, காய்கறிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு அனைத்துப் பயனாளிகளுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.