தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ - திமுக தேர்தல் வாக்குறுதி

காஞ்சிபுரம்: மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Oct 3, 2021, 4:01 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் பாஜக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (அக்.03) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்பு பெறுவதற்கு இரண்டாயிரம், பத்தாயிரம் என கமிஷன் வாங்குகிறார்கள். திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறதா என மக்கள் சிந்திக்க வேண்டும்.

’எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’

பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம், ஆயிரம் ரூபாய் தொடங்கி, கல்விக் கடன் தள்ளுபடி, சிலிண்டர் இலவசம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

பிறகு எதற்காக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் கூறுகிறார்? மூளையை பயன்படுத்தி மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை” என்றார்.

காங்கிரஸ் - திமுக போன்ற சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல...

மேலும், ”பாரதிய ஜனதா கட்சி அனைத்து சமூகத்தையும் அரவணைத்துச் செல்லக் கூடிய கட்சி. முத்தலாக் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது பாரதிய ஜனதா கட்சி. இஸ்லாமிய சகோதரிகளுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதிமுகவுடன் பரஸ்பரமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கூட்டணியில் இருக்கிறோம், காங்கிரஸ் - திமுக கட்சிகளைப் போன்ற சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல இது” என்றார்.

இதையும் படிங்க:நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details