தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிட் பண்ட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி கைது - தமிழ்நாடு காவல்துறை

சிட் பண்ட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிபிஜிடி சங்கர் கைது செய்யப்பட்டார்.

பாஜக மாநில நிர்வாகி கைது
பாஜக மாநில நிர்வாகி கைது

By

Published : Sep 3, 2022, 2:19 PM IST

திருவள்ளூர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள பெரிய பாளையம் அருகே ஜோதி(33) என்பவர் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புறம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஜோதியை அழைத்துப்பேசிய வளர்புறம் ஊராட்சிமன்ற தலைவரும், தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளருமான பி.பி.ஜி.டி சங்கர், சத்தியமூர்த்தியிடம் பணத்தை கேட்டால், உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஜோதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிபி.ஜி.டி.சங்கர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க:“இந்துக்களுக்கான எனது பணி தொடரும்” - கனல் கண்ணன்

ABOUT THE AUTHOR

...view details