தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர்கள் இந்திக்கு ஆதரவாக போராடுவார்கள் - இல. கணேசன் - bjp party ila ganesan presmeet about hindi language

கன்னியாகுமரி: தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்திக்கு ஆதரவாக விரைவில் போராடும் சூழல் உருவாகும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ilaganesan

By

Published : Oct 3, 2019, 4:58 PM IST

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் ”தூய்மை இந்தியா என்ற மகத்தான திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் திறந்த நிலை கழிப்பறை இல்லாத நிலையை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி. நாட்டில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியதற்கு வாழ்த்துகிறேன். அவர் கூறியது போன்று, அரசியல் ரீதியாக காங்கிரசின் எண்ணிக்கையை பூஜ்ஜியம் ஆக்குவதே பாஜகவின் இலக்கு” எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., உடனான பாஜக கூட்டணி சுமுகமாக உள்ளது என்றும், நாங்குநேரி சட்டசபை இடை தேர்தலில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வெற்றிபெற இணைந்து பணியாற்றுவோம் எனவும் கூறினார்.

பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன்

மேலும் அவர், இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்திக்கு ஆதரவாக, தமிழகத்தில் விரைவில் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ் தெரியாதவர் - தமிழ்நாட்டில் நீதிபதிகளா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details