தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனிதனை அறுப்பது போல் கேக்கை வெட்டிய ரவுடி - வைரல் வீடியோ - ரவுடி தமிழ்வானன்

காஞ்சிபுரம்: கல்லூரி வளாகத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியின் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

college campus

By

Published : Aug 31, 2019, 9:53 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தமிழ்வானன். இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரவுடி தமிழ்வாணன் தன் சக நண்பர்களுடனும், கல்லூரி மாணவர்களுடனும் சேர்ந்து வீச்சு அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

ரவுடி பிறந்த கொண்டாடிய வைரல் வீடியோ

அரிவாளால் கேக் வெட்டிய காட்சியைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், தமிழ்வாணன் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளன. பொதுமக்களிடையே வன்முறையை தூண்டக்ககூடிய இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கது. எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details