காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரது மனைவி சத்யா (21). இவர் பிரசவத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரசவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறப்பு! - Kanchipuram District News
காஞ்சிபுரம்: மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ்சிலேயே சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸ்சில் பிறந்த குழந்தை
இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு இவரை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே செல்லும் போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (E.M.T) கௌதம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹரி விக்னேஷ் ஆகியோரின் உதவியோடு அவருக்கு ஆம்புலன்ஸ்சிலேயே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
தற்போது தாயும், சேயும் நலமுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் 3 வயது சிறுமியின் செயல்!