செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேலாக பார்வையாளர்கள் வருவது வழக்கம். தற்போது, வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து, குட்டிகளுடன் உலவி வருகின்றன.
கரோனா வைரஸ் எதிரொலி: மூடப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்! - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடல்
காஞ்சிபுரம்: கரோனா வைரஸ் காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது.
இந்த சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் வரை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை 40 ஆயிரம் பறவைகள் உள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் கரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் 31 ஆம் தேதி வரை சரணாலயம் மூடப்படும் என்றும், மறு உத்தரவு வரும் வரை நாட்கள் அதிகரிப்பதற்கும், குறைவதற்கும் வாய்ப்பு உள்ளதாக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்த கிராமம்!